search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை விபத்தில்"

    • தள்ளு வண்டி மீது பழனிசாமியின் மோட்டார் சைக்கிள் மோதியது.
    • சிகிச்சை பலனின்றி பழனிசாமி இறந்தார்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த சின்னமடத்துப்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 64). இவர் பெருந்துறை சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியக வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். மடத்துப்பாளையம் பிரிவு அருகே சென்றபோது அங்கு ரோட்டை கடக்க முயன்ற தள்ளு வண்டி மீது எதிர்பாராத விதமாக பழனிசாமியின் மோட்டார் சைக்கிள் மோதியது.

    இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து பழனிசாமி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பழனிசாமி இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்று கொண்டு இருந்தனர்.
    • கார் எதிர்பாராத விதமாக பாலத்தில் மோதி கார் கவிழ்ந்தது.

    பேராவூரணி:

    மதுரை பழைய குயவர் பாளையம் பகுதியைச் சேர்ந்த அந்தோணி ராஜன் (வயது 50), இவரது மனைவி சகாயராணி (45), மகன் ஜெரோம் (15), மாமியார் சூசைமேரி(65) ஆகியோருடன் வேளாங்கண்ணி சென்று பேராலயத்தில் சாமி கும்பிட்டு விட்டு திரும்பி மதுரைக்கு செல்வதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்று கொண்டு இருந்தார்.

    காரை அந்தோணி ராஜன் ஓட்டினார்.

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரம் பிள்ளையார்திடல் சோதனை சாவடி அருகே சென்ற போது கார் எதிர்பாராத விதமாக பாலத்தில் மோதி கார் கவிழ்ந்தது.

    இதில் காரில் பயணம் செய்த 4 பேரும் காயம் அடைந்தனர்.

    பலத்த காயமடைந்த சூசைமேரி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பழனிசாமி மீது மோதி விட்டது.
    • இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பழனிசாமி உயிரிழந்தார்.

    பெருந்துறை:

    திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டன்பாளையம் ஓடக்காட்டைச் சேர்ந்த கருப்பன் மகன் பழனிசாமி (வயது 50). இவர் மரம் வெட்டும் கூலி தொழிலாளி.

    இவர் கடந்த 27-ம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் பெருந்துறைக்கு வந்து விட்டு ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவர் பெருந்துறை, குன்னத்தூர் ரோட்டில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக பழனிசாமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் பலத்த காயமடைந்த பழனிசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பழனிசாமி உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


    • மாரிமுத்து தலையில் பலத்த அடிபட்டு ரத்தக்காயம் ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா, பணமடலிசத்திரம் அடுத்த ஆராய்ச்சி பட்டி வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்த மாரிப்பாண்டி மகன் மாரிமுத்து 36. இவருக்கு செல்வி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

    மாரிமுத்து சில மாதங்க ளாக மொடக்குறிச்சி அருகே உள்ள எழுமாத்தூரில் தனியாருக்கு சொந்தமான ஸ்பின்னிங் மில் ஒன்றில் லோடுமேன் ஆக வேலை செய்து வருகிறார்.

    நேற்று மாலை பாசூர் ரோட்டில் இருந்து எழுமாத்தூர் நோக்கி அதே ஊரை ச் சேர்ந்த பொன்னு சாமி என்பவர் உடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

    பொன்னுசாமி இருசக்கர வாகனத்தை ஓட்ட மாரிமுத்து பின்னால் அமர்ந்து கொண்டு அதி வேகமாக வந்த பொழுது, எழுமாத்தூர் பொன்காளி யம்மன் கோயில் அருகே நிலைத்தடுமாறி சாலை யோரம் இருந்த கல் மீது மோதி இருவரும் கீழே விழுந்தனர்.

    இந்த விபத்தில் பின்னால் அமர்ந்து வந்த மாரிமுத்து தலையில் பலத்த அடிபட்டு ரத்தக்காயம் ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே பலியானார். பொன்னு சாமிக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    தகவல் அறிந்த மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரிமுத்துவின் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து உறவின ர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்தில் போலீஸ் ஏட்டு தனக்கொடிக்கு இடதுபுற தோலில் காயம் ஏற்பட்டது.
    • இந்த விபத்து குறித்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்தவர் தனக்கொடி (52). இவர் ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்கள்.

    தற்போது தனக்கொடி கருங்கல்பாளையம் காவிரிக்கரை அருகே உள்ள சோதனை சாவடியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அருகே உள்ள டீக்கடைக்கு டீ குடிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    டீ குடித்துவிட்டு மோட்டார் சைக்கிளை திரும்பிய போது பின்னால் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும், தனக்கொடி மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக மோதின.

    இந்த விபத்தில் போலீஸ் ஏட்டு தனக்கொடிக்கு இடதுபுற தோலில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த வரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இந்த விபத்து குறித்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஷங்கரின் மோட்டார் சைக்கிளுக்கு முன்னால் சென்ற லாரி மீது சங்கரின் பைக் திடீரென மோதியது.
    • இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலையில் இருந்து காங்கேயம் செல்லும் வழியில் உள்ளது வாய்க்கால்புதூர். இங்குள்ள காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (35). இவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இவரது மனைவி பவித்ரா. சங்கர் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சங்கர் தனது மோட்டார் சைக்கிளில் சென்னிமலையில் உள்ள காங்கேயம் ரோட்டில் பசுவபட்டி பிரிவு அருகே இரவு நேரத்தில்  சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. ஷங்கரின் மோட்டார் சைக்கிளுக்கு முன்னால் சென்ற லாரி மீது சங்கரின் பைக் திடீரென மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த சங்கரை பெருந்துறையில் உள்ள ஐ ஆர்.டி.டி. அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சங்கர் இறந்து விட்டார்.

    இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×